நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது! ஒரே நாளில் 217 பேர் உயிரிழப்பு!!

முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில்8,909 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்தது! ஒரே நாளில் 217 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2,07,615 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,01,497 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 1,00,303 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 5,815 ஆக அதிகரித்துள்ளது. 

முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 217 ஆக அதிகரித்துள்ளது.

  • இந்தியாவிற்கு முதல் கட்டமாக 100 வென்டிலேட்டர்களை அமெரிக்கா அடுத்த வாரம் அனுப்ப இருக்கின்றது. இந்த தகவலை சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைப்பேசி வாயிலாக கலந்தாலோசித்த போது தெரிவித்துள்ளார்.
  • நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்து வருகின்றது. இன்று காலை நிலவரப்படி குணமடைந்தோரின் விகிதமானது 48.31 என்கிற சதவிகிதத்தில் உள்ளது. இதுவரை 1,00,303 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 72 ஆயிரத்தினை கடந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு ஒரு புறம் இருக்க மற்றொரு சவாலாக தற்போது நிசர்கா புயல் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இடையேயான  இன்று மத்தியம் கரையை கடக்கின்றது.
  • மும்பையின் நான்கு முக்கிய தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று சிகிச்சைக்கான அரசு வழிக்காட்டுதல்களை பின்பற்றவில்லை என கூறி மும்பை மாநகராட்சி அந்த மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது என மகாராஷ்டிரா பொது சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
  • தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 24,586 ஆக அதிகரித்துள்ளது. அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தற்போது மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது.
  • தேசிய தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், மருத்துவமனையில் வென்டிலேட்டர் வசதிகள் மற்றும் படுக்கை வசதிகளை அறிய புதிய மொபைல் செயலியை வெளியிட்டுள்ளார் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.
  • டெல்லியிலிருந்து சமீபத்தில் சிக்கிம் வந்தடைந்த நபருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கிமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பெம்பா ஷெரிங் பூட்டியா தெரிவித்துள்ளார்.
  • சமீபத்தில் நாட்டின் தொழிலதிபர்களுடனான உரையாடலில் “நாம் நம்முடைய வளர்ச்சியினை திரும்பப் பெறுவோம். என்னை நம்புங்கள். வளர்சியை ஏற்படுத்துவது அவ்வளவு கடினம் அல்ல“ என குறிப்பிட்டிருந்தார்.
  • உலக வல்லரசான அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,081 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவித்துள்ளன.
  • சீனாவில் வூகான் நகரில் 300 நபர் தொற்று அறிகுறியின்றி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இரண்டாவது முறையாக பரிசோதனையை மே 14 அன்று தொடங்கியது சீன அரசு. சுமார் 9.9 மில்லியன் மக்கள் பரிசோதிக்கப்பட உள்ளனர்.