This Article is From Jan 25, 2020

கொரோனா வைரஸ் அறிகுறி: இந்தியா திரும்பிய 11 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்!

Coronavirus: சீனாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் இருந்து திரும்பும் பயணிகள் விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கிரினிங் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

Thiruvananthapuram:

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நான்கு மாநிலங்களை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸூக்கான அறிகுறிகள் லேசாக தென்படுவதன் காரணமாக அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 1,300 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

தொடர்ந்து, கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூரில் ஒருவர், ஹைதராபாத்தில் ஒருவர் என 11 பேர் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக கொரனோ வைரஸ் பாதிப்பு குறித்து கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவர் ஃபெட்டில் கூறும்போது, கேரளாவில் உள்ள 7 பேருக்கும் லேசானா வைரஸ் அறிகுறிகள் உள்ளது. அதனால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீனாவில் இருந்து திரும்பியதை தொடர்ந்து, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 

சீனா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட பிரதான பகுதிகளில் இருந்து இந்தியா திரும்பும் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கிரினிங் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

தனிமையில் வைக்கப்பட்டுள்ள 11 பேரில் மும்பை மருத்துவமனையில் உள்ள இரண்டு பேருக்கும், ஹைதராபாத் மற்றும் பெங்களூர் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் சோதனையில் எந்த அறிகுறியும் இல்லை என்றே முடிவுகள் வந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் மொத்தம் 80 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 73 பேருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. அவர்களில் 7 பேருக்கு மட்டுமே காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற லேசான அறிகுறிகள் தென்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள இருவரின் மாதிரிகளும் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கேரள சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனியாக ஒரு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சுவாச தொற்று உள்ளிட்ட சந்தேகத்திற்குரிய அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகச்சை அளிக்க படுக்கைகள் தயாரான நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

"விமான நிலையங்களில், சீனாவிலிருந்து திரும்பும் பயணிகள் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றால், அவர்களின் பெயர்கள் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், சில வாரங்களுக்கு அவர்கள் தங்கள் வீடுகளில் தானாக தனிமைப்படுத்திக்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளளனர். அவர்களது உடல்நிலைகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

from agencies)

.