This Article is From Mar 03, 2020

கொரோனா பீதி: பெங்களூர் மென்பொறியாளருடன் இருந்தவர்களும் கண்காணிப்பில் வைப்பு!

தெலுங்கானாவின் ஐதராபாத் பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றைய தினம் உறுதிசெய்யப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த அவர் அண்மையில் துபாய் சென்று வந்ததாகத் தெரிகிறது.

கொரோனா பீதி: பெங்களூர் மென்பொறியாளருடன் இருந்தவர்களும் கண்காணிப்பில் வைப்பு!

ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் மென்பொறியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • ஐதராபாத்தில் மென்பொறியாளருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி
  • ஐதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • அவருடன் இருந்தவர்களும் கண்காணிப்பில் வைப்பு
Bengaluru:

கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட மென்பொறியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த மென்பொறியாளருடன் தங்கியிருந்த மற்ற நபர்களின் உடல்நிலையையும் மருத்துவக் குழு தீவிரமாகக் கண்காணித்து வருவதாக கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார். 

தெலுங்கானாவின் ஐதராபாத் பகுதியில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றைய தினம் உறுதிசெய்யப்பட்டது. பெங்களூரைச் சேர்ந்த அவர் அண்மையில் துபாய் சென்று வந்ததாகத் தெரிகிறது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, ஐதராபாத்தில் கொரோன வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபர் பெங்களூர் சென்று வந்தது எங்களுக்குத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவர் தங்கியிருந்த வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் அடையாளம் காணப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றைய தினம் கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையர் உள்ளிட்ட சுகாதாரத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பெங்களூரில் இருக்கும் போது அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  

பெங்களூரில் பணிபுரிந்து வந்த மென்பொருள் பொறியாளர் கடந்த மாதம், துபாயின் ஹாங்காங் பகுதியில் உள்ளவர்களுடன் பணிபுரிந்து வந்துள்ளார். இதிலிருந்தே அவருக்கு வைரஸ் தொற்று உருவாக வாய்ப்புகள் உள்ளதாகத் தெலுங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

கடந்த பிப்.19ம் தேதி பெங்களூரு வந்த அவர், அங்கிருந்து ஐதராபாத்துக்குப் பேருந்தில் சென்றுள்ளார். அங்கு ஐதராபாத்திலிருந்த போது காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், அவருக்குக் காய்ச்சல் குறையாததால், அங்கிருந்து காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

.