This Article is From May 23, 2020

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை: எடப்பாடி பழனிசாமி

மருத்துவக் குழு ஆலோசனையின் படி கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக இல்லை: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1,25,101 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில் 6,654 பேர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 569 பேர் ஆவர். இதைத்தொடர்ந்து, சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, தமிழகத்தில் நாள்தோறும் சுமார் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத்தொடங்கியுள்ளன.  

ஆட்டோக்கள் இயக்கவும், சலூன்களை இயக்கவும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவக் குழு ஆலோசனையின் படி கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.  

அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. கொரோனா தடுப்பதில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்களின் பணி பாராட்டுக்குரியது. 

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் அரசின் மீது புகார் தெரிவிக்கிறார். பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ் பாரதி இழிவாகப் பேசியபோதே கட்சி தலைவரான ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

.