கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல சமையற்கலை நிபுணர் உயிரிழப்பு!!

காய்ச்சல், மூச்சு பிரச்னை போன்ற கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் ஃப்ளாய்ட் கார்டோசுக்கு இருந்துள்ளன. இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரபல சமையற்கலை நிபுணர் உயிரிழப்பு!!

நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பிரபல சமையற்கலை நிபுணர் ஃப்ளாய்ட் கார்டோஸ் உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

மும்பையில் உள்ள பிரபல உணவகங்களான பாம்பே கேன்டீன் மற்றும் ஓ பெட்ரோ ஆகியவற்றின் இணை உரிமையாளரான கார்டோஸ், உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்டவர். 

சமீபத்தில் தி பாம்பே ஸ்வீட் ஷாப் என்ற தனது 3-வது நிறுவனத்தையும் தொடங்கினார்.

மும்பையை சேர்ந்த கார்டேஸ் மார்ச் 8 வரைக்கும் இங்குதான் இருந்தார். ஆனால் மார்ச் 18-ம்தேதி தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். 

காய்ச்சல், மூச்சு பிரச்னை போன்ற கொரோனா வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள் ஃப்ளாய்ட் கார்டோசுக்கு இருந்துள்ளன. இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com