தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்தது!!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் சுமார் மூன்றரை மணி நேரத்திற்கு முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்தது!!

சென்னையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா பாதிகக்ப்பட்ட ஒருவர் குணம் அடைந்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. மெள்ள மெள்ள பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 26 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பதிவில் 

''திருச்சியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் துபாயிலிருந்து திருச்சிக்கு வந்தவர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் எண்ணிக்கை மீண்டும் 2 உயர்ந்துள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்ட 2 பேரும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவர் குணம் அடைந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று தெரிவித்தார். இது கொரோனாவால் அச்சம் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com