This Article is From Apr 06, 2020

கொரோனா ஒரு தொற்றுநோய்; அது சாதி, மதம் பார்ப்பதில்லை: ஜெயக்குமார்

எல்லோரும் விழிப்புடன் இருந்து, அரசின் அறிவுரைகளைக் கேட்டால் தான், நாம் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுக்க முடியும்.

கொரோனா ஒரு தொற்றுநோய்; அது சாதி, மதம் பார்ப்பதில்லை: ஜெயக்குமார்

கொரோனா ஒரு தொற்றுநோய்; அது சாதி, மதம் பார்ப்பதில்லை: ஜெயக்குமார்

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஒரு தொற்றுநோய்; அது சாதி, மதம் பார்ப்பதில்லை
  • கடுமையான நடவடிக்கை மூலம் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து விட்டோம்,
  • சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மக்களின் கடமை.

கொரோனா என்பது ஒரு தொற்று நோய். அது சாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 693 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மையில் வந்த இந்த தகவல்கள் அறிக்கைகளை தொடர்ந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000த்தை கடந்தது. தொடர்ந்து, 4வது நாளாக பாதிப்பு எண்ணிகை 500க்கும் மேல் அதிகரித்து வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தற்போது 485லிருந்து 571 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அதிக அளவில் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  தமிழகத்தில் தொற்று உள்ளதாக நேற்று புதிதாகக் கண்டறியப்பட்ட 86 பேரில் 85 பேர் டெல்லி நிகழ்வில் பங்கேற்று திரும்பியவர்கள் என் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, கடுமையான நடவடிக்கை மூலம் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்து விட்டோம், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மக்களின் கடமை.

கண்டறிதல், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தியவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துதல், கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய 4 விஷயங்களை தமிழக அரசு செய்து வருகிறது.

இது ஒரு தொற்று நோய். அது சாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோரும் விழிப்புடன் இருந்து, அரசின் அறிவுரைகளைக் கேட்டால் தான், நாம் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுக்க முடியும்.

மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கொரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லையென்றால், மூன்றாம் நிலையான ஒரு அபாய நிலைக்குச் சென்று விடுவோம் என்று அவர் கூறினார். 

.