This Article is From Jul 25, 2019

காவல் நிலையத்தில் டிக் டாக் செய்த பெண் போலீஸ் சஸ்பெண்ட்!

அர்பிதா சவுத்ரி காவல் நிலையத்திற்குள் லாக் அப் அருகே மாற்று உடையில் நின்றுக் கொண்டு நடனம் ஆடியுள்ளார்.

காவல் நிலையத்தில் டிக் டாக் செய்த பெண் போலீஸ் சஸ்பெண்ட்!

ஒழுக்கத்தை கடைபிடிக்காததால் பெண் காவலர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Mehsana:

குஜராத் மாநிலத்தில் காவல் நிலையத்திற்குள் டிக்-டாக் மூலம் நடனமாடிய பெண் காவலர் ஒருவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைராலன நிலையில் அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்படுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியான அந்த வீடியோவில், காவல் நிலையத்திற்குள் லாக் அப் அருகே மாற்று உடையில் நின்றுக் கொண்டு பாடல் ஒன்றுக்கு நடனம் அர்பிதா நடனமாடுகிறார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையர் மஞ்சிதா கூறும்போது, அர்பிதா சவுத்ரி விதிகளை மீறியுள்ளார். பணி நேரத்தில் அவர் சீருடையில் இல்லாமல் இருந்துள்ளார். காவல் நிலையத்தில் வைத்து தன்னை தானே நடனமாடிய படி வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

காவலர்கள் முதலில் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும், அர்பிதா சவுத்ரி அதனை பின்பற்றவில்லை. அதனால், அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மஞ்சிதா கூறினார். தொடர்ந்து, துறை ரீதியாக சவுத்ரியை விசாரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும், சில அதிகாரிகள் கூறும்போது, அர்பிதா சவுத்ரி, கடந்த ஜூலை 20ஆம் தேதியில் அந்த டிக் டாக் வீடியோவை எடுத்துள்ளார். தொடர்ந்து, அதனை வாட்ஸ்ஆப் மற்றும் சமூகவலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளனர். 

.