குனிந்து கும்பிடு போட்டு பதவி வாங்குனீங்க - செந்தில் பாலாஜி ஆவேசம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  `செந்தில் பாலாஜி குனிந்து, கும்பிட்டுப் பதவியை வாங்கினோம் என எங்களைத் தொடர்புபடுத்திப் பேசுகிறார். அவரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது’. என்று கூறினார். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
குனிந்து கும்பிடு போட்டு பதவி  வாங்குனீங்க - செந்தில் பாலாஜி ஆவேசம்

தமிழக அரசின் சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் வருங்காலத் தலைமை மு.க ஸ்டாலின்தான் என்றும் ‘ஸ்டாலின் யாரிடமும் குனிந்து கும்பிட்டு பதவியை வாங்கவில்லை' என்று பேசியுள்ளார். 

செந்தில் பாலாஜியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அவரின் பேச்சுக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  `செந்தில் பாலாஜி குனிந்து, கும்பிட்டுப் பதவியை வாங்கினோம் என எங்களைத் தொடர்புபடுத்திப் பேசுகிறார். அவரின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது'. என்று கூறினார். 

தொடர்ந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின், "செந்தில் பாலாஜி பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் அமைச்சர்கள் அதற்கு விளக்கம் தரலாம். அ.தி.மு.க பிளவுபட்டபோது ஓ.பி.எஸ் என்னவெல்லாம் பேசினார் என எங்களுக்குத் தெரியாதா. நீங்கள் யாரிடம் குனிந்து கும்பிட்டீர்கள் என்ற பட்டியல் ஆதாரத்துடன் உள்ளது. அதை போட்டுக் காட்ட வேண்டும் என்றால் இந்த ஒரு நாள் பத்தாது. நீங்கள் தவழ்ந்து வந்து பதவியை வாங்கிய வீடியோக்கள் என்னிடம் உள்ளன. போட்டு காட்டட்டுமா?” எனக் கூறியுள்ளார்.

அதிமுகவினரும் திமுகவினரும் மாறி மாறி குறை கூறியதில் சட்டமன்றத்தில் சிறிது நேரத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................