This Article is From Jan 28, 2019

'அன்னை தெரசாவுக்கு மட்டும் பாரத ரத்னாவா?'- சர்ச்சையை கிளப்பும் பாபா ராம்தேவ்

சமீபகாலமாக அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் ராம்தேவ்.

சன்யாசி யாருக்கும் இது வரை பாரத ரத்னா விருது வழங்கபடவில்லை என ராம்தேவ் தெரிவித்தார்

New Delhi:

இந்த ஆண்டிற்கான பாரத ரத்னா விருது பிரணாப் முகர்ஜி, நானாஜி டெஷ்முக், புபன் ஹசாரிக்கா ஆகிய மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த பாரத ரத்னா விருதினை குறித்து யோகா குரு ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 70 ஆண்டு கால சுதந்திரத்தில், இது வரை எந்தவொரு சாதுவிற்கும் பாரத ரத்னா விருது வழங்கபடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாரத ரத்னா விருதிற்கு மத சாயம் பூசப்படுவதாக ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு, பாஜக கட்சிக்காக பிரசாரம் செய்தவர் ராம்தேவ். பின் பதாஞ்சலி நிறுவனத்தை தொடங்கினார் ராம்தேவ். சமீபகாலமாக அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் ராம்தேவ்.

வரும் தேர்தலில் பாஜக கட்சிக்காக பிரசாரம் செய்வீர்களா என கேட்டதிற்கு, ‘நான் எதற்கு செய்ய வேண்டும்?' என கேட்டார்.

‘இது வரை ஒரு சன்யாசிக்கு கூட பாரத ரத்னா விருது வழங்கபடவில்லை. இந்நாட்டிற்கு மகரிஷி தயானந்தா மற்றும் சுவாமி விவேகானந்தா ஆகியோரின் பங்களிப்பு மிக பெரியது. ஏன் அவர்களுக்கு இது வரை பாரத ரத்னா வழங்கபடவில்லை?' என கேள்வி எழுப்பினார்.

‘கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அன்னை தெரசாவிற்கு பாரத ரத்னா வழங்கியுள்ளனர். ஆனால், இந்து குருகளுக்கு வழங்கபடவில்லை. இந்தியாவில் ஹிந்துவாக இருப்பது குற்றமா?' என தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

இந்த ஆண்டு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. வரும் தேர்தலை கருத்தில் கொண்டே பாஜக கட்சிக்கு சாதகமாக உள்ளவர்களுக்கு தான் இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

பல காங்கிரஸ் தலைவர்கள் சிவகுமார சுவாமிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

.