This Article is From Mar 18, 2020

சர்ச்சை பேச்சு… நடிகர் விஜய்க்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போர்க்கொடி!!

“குறிப்பிட்ட உடல் குறையைக் கொச்சையாகச் சுட்டிக்காட்டுவது போலப் பேசுவது கண்டிக்கத்தக்கது"

சர்ச்சை பேச்சு… நடிகர் விஜய்க்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் போர்க்கொடி!!

"மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையையே, பயன்படுத்த வேண்டும்"

ஹைலைட்ஸ்

  • சென்னையில் 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா நடந்தது
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்
  • விஜய் சேதுபதியும் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார்

சமீபத்தில் தனது ‘மாஸ்டர்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் நடிகர் விஜய். இதற்கு மாற்றுத் திறனாளிகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் ‘டிசம்பர் 3 இயக்கம்' கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக விஜய், இசை வெளியீட்டு விழாவின் போது, ‘மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்க வேண்டும், சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடக்கக்கூடாது.

நம்ம புடிக்காதவங்க நம்ம மேல கல் எரிவாங்க, ஆனா சிரிப்பாலயே அவங்கள கொல்லணும், kill them with your success, bury them with your smile. உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருக்கவேண்டியதா இருக்குங்க' எனப் பேசினார். வாய் பேச முடியாதவர்களை ‘ஊமை' என்று விஜய் குறிப்பிட்டுப் பேசியதற்கு டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர், “குறிப்பிட்ட உடல் குறையைக் கொச்சையாகச் சுட்டிக்காட்டுவது போலப் பேசுவது கண்டிக்கத்தக்கது. மாற்றுத் திறனாளிகள் என்ற வார்த்தையையே, பயன்படுத்த வேண்டும். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் உடன்படிக்கை மற்றும் மாற்றுத் திறனாளிகள் குறித்த இந்தியச் சட்டப் பிரிவு, 92 ‘அ'வின் படியும் விஜய் பேசியது தவறு,” என்று கூறியுள்ளார். 

.