பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்!!

தூக்கு பாலம் வலுவிழந்து விட்டதை தொடர்ந்து புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடக்கம்!!

பாம்பன் ரயில்வே பாலம்.


Rameswaram: 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் புதயி ரயில்வே பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. 

புதிய பாலம் அமைக்கப்படுவதை முன்னிட்டு பூமி பூஜைகள் போடப்பட்டுள்ளன. இந்த பாலத்தை பொதுத்துறை நிறுவனமான ரயில்வே விகாஸ் நிகாம் லிமிட்டெட் மேற்கொள்ள உள்ளது. 

முன்னதாக ரயில்வே பாலத்திற்கான அடிக்கல்லை கடந்த மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். மொத்தம் 2.05 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 

பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் இடையே, அதிவேகத்தில் ரயில்களை இயக்கவும், அதிக சரக்குகளை கொண்டு செல்லவும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. 

மழைக்காலத்தின்போதும் பாலத்தை அமைக்கும் பணிகள் விரைவாக நடத்தப்பட்டு வருகிறது. இதனால் 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவேற்றி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

101 மதகுகள் இந்தப் பாலத்தில் இடம்பெறும். திறந்து மூடும் வசதிகளை கொண்ட ரயில்வே பாலம், சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் செல்வதற்கு வழி விடும் வகையில் அமைக்கப்படும். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................