“அமித்ஷா மீது நடவடிக்கை எடுங்க!”- Citizenship Bill ஒப்புதல்... அமெரிக்கா கிளப்பிய புயல்!

According to the Citizenship (Amendment) Bill, - இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

“அமித்ஷா மீது நடவடிக்கை எடுங்க!”- Citizenship Bill ஒப்புதல்... அமெரிக்கா கிளப்பிய புயல்!

குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “0.001 சதவிகிதம் கூட இது இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல,” என்று முழங்கினார் அமித்ஷா

ஹைலைட்ஸ்

  • Citizenship (Amendment) Bil-க்கு அமெரிக்க அரசு ஆணையம் எதிர்ப்பு
  • இரு அவைகளிலும் மசோதா ஒப்புதல் பெற்றால் நடவடிக்கை எடுக்க சிபாரிசு
  • லோக்சபாவில் மசோதாவை அமித்ஷாதான் அறிமுகம் செய்தார்
Washington:

அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அரசு ஆணையம், திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திய காரணத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒப்புதல் பெற்றால் அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவில், பாகிஸ்தான் வங்கதேசம் மற்றும் அப்கானிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கியர்கள், புத்தர்கள், ஜெயினர்கள், பார்சிக்கள் மற்றும் கிறித்துவர்கள், டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டு வரை மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்கள் அகதிகளாக நடத்தப்படாமல், குடியுரிமை வழங்கப்படும் என்கிறது.

இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச மத சுதந்திரத்துக்கான அரசு ஆணையம், USCIRF, லோக்சபாவில் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளது. 

“திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா, இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்றுவிட்டால், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இந்த மசோதாவானது இந்தியாவை தவறான திசையில் இட்டுச் செல்லும். இந்திய சட்ட சாசனத்துக்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் இது செயல்படும். 

இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது பல லட்ச முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோக வழிவகுக்கும்.” என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 

Newsbeep

12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. 311 லோக்சபா உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க, 80 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசியல் சட்ட சாசனத்திற்கு எதிரானது இந்த மசோதா என்னும் வாதத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியுரிமை மசோதாவை அறிமுகப்படுத்திப் பேசும்போது, “0.001 சதவிகிதம் கூட இது இந்திய சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல,” என்று முழங்கினார். 

இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், அப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்கப்படாது என்பதை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

இந்தியாவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்தே, உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொடர்ந்து சொல்லி வருகிறது. அதனால்தான், இதற்கு முன்னரும் இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி கருத்து கூறியிருந்த USCIRF அமைப்பினருக்கு இந்தியா விசா தரவில்லை.

அதேபோல USCIRF சொல்வதால் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், அதன் சிபாரிசின் பேரில் நடவடிக்கை முற்றிலும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதிபடவும் கூற முடியாது.