This Article is From Aug 25, 2020

இது பதவியை பற்றியது அல்ல; மீண்டும் சர்சையை கிளப்பும் கபில் சிபில்!

தொடர்ந்து, தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களின் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது பதவியை பற்றியது அல்ல; மீண்டும் சர்சையை கிளப்பும் கபில் சிபில்!

இது பதவியை பற்றியது அல்ல; மீண்டும் சர்சையை கிளப்பும் கபில் சிபில்!(File)

New Delhi:

இது பதவியை பற்றியது அல்ல; எனது நாட்டை பற்றியது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சித் தலைமை குறித்து 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் கடிதம் அளித்த நிலையில், நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை ராகுல் காந்தி கடும் காட்டமாக விமர்சித்ததாக கூறப்பட்டது. 

அவர், கடிதம் எழுதியவர்கள் பாஜவுடன் கூட்டு வைத்ததாக கூறியதாக கூறப்பட்டது. இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் அது போன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என ராகுல் மறுப்பு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களின் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கபில் சிபில் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ராகுல் காந்தி நாங்கள் பாஜகவுடன் கூட்டு வைத்தாக குற்றம்சாட்டுகிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை பாதுகாத்து வெற்றி பெற வைத்தோம், பாஜக அரசை வீழ்த்த மணிப்பூரில் கட்சியைக் பாதுகாத்துள்ளோம்.

கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்சினையிலும் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியட்டதில்லை. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறோமா! என்று அவர் பதில் தெரிவித்திருந்தார். 

எனினும், ராகுல் காந்தி தான் அதுபோன்ற கருத்தை தெரிவிக்கவில்லை என்று என்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு கூறியதால், தனது முந்தைய பதிவை திரும்ப பெற்றுக்கொள்வதாக கபில் சிபில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இன்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கபில் சிபில் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், இது பதவியை பற்றியது அல்ல; மிகவும் முக்கியமான எனது நாட்டை பற்றியது என்று அவர் தெரிவித்துள்ளார். 

.