“பதவியேற்ற 48 மணி நேரத்தில்…”- மத்திய அரசை விளாசும் ஜெயக்குமார் எம்.பி.,

இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“பதவியேற்ற 48 மணி நேரத்தில்…”- மத்திய அரசை விளாசும் ஜெயக்குமார் எம்.பி.,

பொது மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை சமீபத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி., ஜெயக்குமார், மத்திய அரசை வறெத்துடுத்துள்ளார். 

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது. அந்த, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த வரைவு பொது மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு, “எந்த மொழியும் எந்த மாநிலத்திலும் திணிக்கப்படாது. இது வெறும் வரைவு மட்டும்தான். இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை” என்று விளக்கம் அளித்தது. தொடர்ந்து திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள ஜெயக்குமார் எம்.பி., “மத்திய அரசு பதவியேற்ற 48 மணி நேரத்தில் இப்படியொரு உணர்வுபூர்வமான விஷயத்தில் கைவைத்திருப்பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. கல்வியில் மொழிக் கொள்கை என்பது நமது நாட்டில் மிகவும் உணர்வுபூர்வமான விஷயமாகும். எதற்கு 3 மொழிகளுடன் மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. 4 மொழிகளைக் கற்கலாம் என்று கூட மத்திய அரசு சொல்லலாம். நிறைய மொழிகள் கற்பது என்பது மாணவர்களுக்கு நல்லதுதான். ஆனால், எந்த மொழியும் திணிக்கப்படக் கூடாது. ஏன் என்றால் நாம் பல மொழிகளை, பல கலாசாரங்களை, பல இனக் குழுக்களைக் கொண்ட நாடு. அதில் ஒரு குறிப்பிட்ட மொழியைத் திணிப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................