'இதுவரை செய்தது இல்லை; இனிமேல் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்வேன்' : ப.சிதம்பரம்!!

ஜொமாட்டோ விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஜொமாட்டோவை பாராட்டி வருகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'இதுவரை செய்தது இல்லை; இனிமேல் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்வேன்' : ப.சிதம்பரம்!!

ட்விட்டரில் ஜொமாட்டோ தரப்பில் அளிக்கப்பட்ட ரீப்ளே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


New Delhi: 

ஜொமாட்டோ விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை தான் ஜொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்யவில்லை என்றும், இனிமேல் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் ஜொமேட்டோ உணவு டெலிவரி ஆப் மூலம், அமித் சுக்லா என்னும் நபர், ஃபுட் ஆர்டர் செய்கிறார். அதை கொண்டு போய் கொடுக்கும் பொறுப்பு ஃபயிஸுக்கு வந்து சேர்கிறது. அமித் சுக்லா என்னும் அந்த நபர், “ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவை சிறிது நேரத்துக்கு முன்னர் ரத்து செய்தேன். இந்து அல்லாத ஒருவர் மூலம் எனது உணவை அவர்கள் கொடுத்து அனுப்பினர். அவரை மாற்ற முடியாது என்று சொன்னார்கள். ரிஃபண்டு கொடுக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்” என்று ட்விட்டர் மூலம் பகிர்ந்தார். 

தொடர்ந்து அமித் சுக்லா, ஜொமேட்டோ கஸ்டமர் கேருடன் தான் உரையாடியவற்றையெல்லாம் ஸ்க்ரீன்-ஷாட்களாக எடுத்து பகிர்ந்துள்ளார். அமித் சுக்லா, இந்த விவகாரத்தை சும்மா விடப் போவதில்லை என்றும் வழக்கறிஞர்கள் அணுக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அவரின் ஒரு ட்வீட்டைப் பகிர்ந்த சொமேட்டோ, “உணவுக்கு மதம் கிடையாது. உணவே மதம்” என்று கூறியுள்ளது. சொமேட்டோவின் இந்த ரிப்ளை நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்,'இதுவரைக்கும் நான் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தது இல்லை. இனிமேல் ஜொமாட்டோவில் ஆர்டர் செய்வேன்' என்று கூறியுள்ளார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................