சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்

2013 தேர்தலில் ரமண்சிங் 36000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சத்தீஸ்கரில் காங்கிரஸ் முன்னிலை - பாஜக முதல்வர் ரமண் சிங் இறங்குமுகம்

மாயவதியின் பகுஜன் சமாஜ் மற்ரும் அஜித் ஜோகியின் ஜனதா கூட்டணி காங்கிரஸின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தியுள்ளன.


Raipur: 

சத்தீஸ்கரில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக காங்கிரஸைவிட முன்னிலையில் பின் தங்கியுள்ளது. மூன்று முறை முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த ரமண்சிங்கும் தான் போட்டியிட்ட தொகுதியில் பின் தங்கியுள்ளார். ராஜ்னந்தகோன் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட கருணா சுக்லாவைவிட வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளார். கருணா சுக்லா வாஜ்பாயின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரமண்சிங் தான் பாஜகவில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர். மோடி குஜராத்தில் இருந்ததை விட 3 வருடங்கள் அதிகமாக முதல்வர் பதவியில் இருந்தவர். 2013 தேர்தலில் ரமண்சிங் 36000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்ரும் அஜித் ஜோகியின் ஜனதா கூட்டணி காங்கிரஸின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தியுள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக இருப்பதால் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2013 தேர்தலில் சத்தீஸ்கரில் பாஜக 49 இடங்களையும், காங்கிரஸ் 39 இடங்களையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................