This Article is From Feb 12, 2020

”ஹக் டே” வீடியோ வெளியிட்டு பாஜகவை வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ்!

#HugDay வைரல் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த வீடியோவை காங்கிரஸ் ட்வீட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது.

”ஹக் டே” வீடியோ வெளியிட்டு பாஜகவை வம்புக்கு இழுக்கும் காங்கிரஸ்!

ஒவ்வொரு ஆண்டும் பாஜகவுக்கு அதே செய்தியை தான் தெரிவிக்கிறோம். கட்டிப்பிடியுங்கள் யாரையும் வெறுக்க வேண்டாம். #HugDayக்கு காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை காங்கிரஸ் சந்தித்த நிலையில், அதன் சமூகவலைதள பக்கங்களை தினமும் உயிர்ப்புடன் வைத்து வருகிறது. பிப்.14ம் தேதி காதலர் தினம் வருவதையொட்டி அதற்கு முன்பாக பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'ஹக் டே' என்ற காரணத்தை பயன்படுத்தி பாஜகவை காங்கிரஸ் கடுமையாக கலாய்த்துள்ளது. 


இதற்காக வைரலான #HugDay ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த வீடியோவை காங்கிரஸ் ட்வீட்டரில் பதிவேற்றம் செய்துள்ளது. 

மேலும் அதில், ஒவ்வொரு ஆண்டும் பாஜகவுக்கு அதே செய்தியை தான் தெரிவிக்கிறோம். கட்டிப்பிடியுங்கள் அன்பை பகிருங்கள், யாரையும் வெறுக்க வேண்டாம் என காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது.

அந்த வீடியோ தொகுப்பில், ராகுல் காந்தி பிரதமர் மோடியை கட்டிப்பிடிக்கும் காட்சிகளுடன், ராகுல் காந்தி பேசும் சில காட்சி தொகுப்பும் அடங்கியுள்ளது. ”காங்கிரஸ் அன்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, என்றும் வெறுப்பின் மீது அல்ல” என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

முன்னதாக கடந்த வருடமும் #ஹக் டேயை முன்னிட்டு, இதே வீடியோவை, காங்கிரஸ் ட்வீட்டரில் பதிவேற்றம் செய்து பாஜகவுக்கு அன்பை பகிரவும் என்று அறிவுரை வழங்கியது. 

.