பிரதமர் மோடிக்கு அமேசானில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஆர்டர் செய்த காங்கிரஸ்!!

குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலையில், இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

பிரதமர் மோடிக்கு அமேசானில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஆர்டர் செய்த காங்கிரஸ்!!

அரசியலமைப்பு சட்ட புத்தகம் மோடிக்காக இன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அமேசானில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை காங்கிரஸ் கட்சி ஆர்டர் செய்துள்ளது. புத்தகம் கைக்கு வந்தவுடன் அதனைப் படிக்குமாறு காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்ட புத்தக ஆர்டரை ஸ்க்ரீன் ஷாட் செய்து காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. அதனைக் குறிப்பிடும் வகையில் மோடிக்கு அரசியலமைப்பு சட்டத்தை ஆர்டர் செய்துள்ளது காங்கிரஸ்.

p34af4mg

‘அன்பான பிரதமரே, அரசியலமைப்பு சட்ட புத்தகம் விரைவில் உங்கள் கைக்கு வந்து விடும். நாட்டை துண்டாடுவதில் இருந்து தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, இந்த புத்தகததை படியுங்கள். இப்படிக்கு காங்கிரஸ் கட்சி' என்று ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த புத்தகத்திற்கான விலையை காங்கிரஸ் கொடுக்கவில்லை. Pay on Delivery முறைப்படி, இந்த புத்தகத்தை பிரதமர் அலுவலகத்தில் உள்ளவர்கள் விலை கொடுத்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிகிறது.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர், மத அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு 2015-க்கு முன்பு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாததால், இந்த சட்டம் அவர்களுக்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

More News