
Adhir Ranjan Chowdhury, இப்படி சர்ச்சையாகும் வகையில் கருத்து சொன்னது இது முதல் முறையல்ல
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு (P Chidambaram), சிபிஐ (CBI) விசாரணை அமைப்பு தொடுத்திருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் (INX Media Case) இன்று பிணை கிடைத்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், அதிர் ரஞ்சன் சவுத்ரி (Adhir Ranjan Chowdhury), உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று ட்வீட் பதிவிட்டார்.
“ப.சிதம்பரம்ஜி-க்கு கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பினால், உண்மையே வெல்லும் என்பது உறுதியாகியுள்ளது. அவர் irresistible” என்று ட்விட்டர் மூலம் கூறினார் சவுத்ரி. அவர் ட்வீட் செய்த அந்த irresistible என்ற வார்த்தையை கிண்டல் செய்யும் வகையில் பல நெட்டிசன்கள் பதிவுகள் இட்டனர்.
— Popunda? (@Aashish728) October 22, 2019
Itni English to Shashi ji ko bhi nahi aati
— Sunderdeep Singh (@SSunderdeep) October 22, 2019
— ashwin aghor (@ashwinaghor) October 22, 2019
சவுத்ரி, இப்படி சர்ச்சையாகும் வகையில் கருத்து சொன்னது இது முதல் முறையல்ல. ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப் பிரவு 370, ரத்து செய்யப்பட்டபோது, அது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நாடாளுமன்றத்தில் பேசினார் சவுத்ரி.
ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகையில் சிதம்பரத்திற்கு, ஐ.என்.எக்ஸ் வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக் கூடாது, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் சிதம்பரத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் 74 வயதாகும் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை அமலாக்கத்துறையினர் கடந்த புதன் கிழமை கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதித்துறை அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த ப.சிதம்பரம், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார். அரசியல் பழிவாங்குதல் காரணங்களுக்காக தன்மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகையை சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்தது. அதில், பீட்டர் மற்றும் இந்திராணி முகர்ஜியால் உருவாக்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதியைப் பெற்றுத் தருவதற்காக சிதம்பரம் ரூ. 9.96 லட்சத்தை லஞ்சமாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.