‘முஸ்லிம் வாக்குகள் குறித்த கமல்நாத்தின் கருத்து!’- ம.பி தேர்தலில் ட்விஸ்ட்

மத்திய பிரதேசத்தில் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS

இதற்கு பாஜக தரப்பு, ‘காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்’ என்று கருத்து தெரிவித்துள்ளது.


New Delhi: 

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருந்து வரும் நிலையில், களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கமல்நாத், ‘முஸ்லிம் வாக்குகள்' குறித்து பேசியுள்ளது போன்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

பாஜக-வின் அமித் மால்வியா கமல்நாத் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார். வீடியோவில் கமல்நாத், ‘முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் நமக்கு அவர்களின் 90 சதவிகிதம் ஓட்டுகள் வேண்டும். முஸ்லிம்கள் அதிகமாக எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். சில இடங்களில் 60 சதவிகிதத்துக்கும் குறைவான முஸ்லிம் வாக்குகளே பதிவாகியிருக்கும். அது ஏன்? அதற்குப் பின்னால் முக்கியக் காரணம் இருக்க வேண்டும்' என்று பேசுவது போன்று இருக்கிறது.

இதற்கு பாஜக தரப்பு, ‘காங்கிரஸின் உண்மை முகம் இதுதான்' என்று கருத்து தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷோபனா ஓசா, ‘பாஜக அனைத்து மட்டங்களிலும் தோற்றுவிட்டது என்று தான் நினைக்கிறேன். அந்த வீடியோவில் என்ன தவறு உள்ளது. அவர் ஓட்டுக்காகத் தான் அப்படி பேசியிருக்கிறார். மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பாஜக பதில் சொல்ல விரும்பவில்லை. அதனால் தான் இப்படிப்பட்ட வேலைகளில் அது இறங்கியுள்ளது.

பல்வேறு சமூகத்தினர் கமல்நாத்தைச் சந்திக்கின்றார்கள். அவர்களிடம் அவர், காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கேட்கிறார். அவர் பேசியதின் சில பகுதிகளை மட்டும் வெட்டி, வீடியோவாக வெளியிட்டு பாஜக தான் அரசியல் செய்கிறது' என்று விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் வரும் 28 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக பாஜக தான், அம்மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகிறது. இந்த முறை காங்கிரஸ், ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக, 4வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................