“காங்கிரசுக்கு வீரர்கள் உள்ளனர்; தளபதி இல்லியே” - அமித் ஷா நக்கல்

மத்திய பிரதேச தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, இந்தியாவின் பெருமையை மோடி உலகம் அறியச் செய்துள்ளதாக கூறியுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
“காங்கிரசுக்கு வீரர்கள் உள்ளனர்; தளபதி இல்லியே” - அமித் ஷா நக்கல்

மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமித் ஷா.


Seoni: 

மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். லக்னாடோன் மாவட்டத்தில் உள்ள சியோனி நகரில் அமித் ஷா பேசியதாவது-

மத்திய பிரதேசத்தில் பாஜக சிவராஜ் சிங் சவுகானின் தலைமையின் கீழ் தேர்தல் வேலை செய்து வருகின்றனர். இங்கு சிவராஜ் சிங் சவுகான்தான் முதல்வர் வேட்பாளர். காங்கிரஸ் கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்றே தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு வீரர்கள் உள்ளனர். தளபதி இல்லை. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ராணுவத்துக்கு தளபதி யார் என்று ராகுல் காந்திதான் சொல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் மோடியை விட வெளிநாடுகளுக்கு அதிகமுறை சென்றுள்ளார். ஆனால் மோடிக்கு கிடைத்திருக்கும் மரியாதை மன்மோகன் சிங்குக்கு கிடைக்கவில்லை.

வெளிநாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி இந்தியாவின் புகழை அங்கு பரப்பியுள்ளார். மன்மோகன் சிங் வெளிநாடுகளுக்கு சென்றால் ஆங்கிலம் மற்றும் அந்நாட்டின் தாய்மொழியில் இருக்கும் உரையை கொண்டு செல்வாராம். அப்படி ஒருமுறை தாய்லாந்து சென்றபோது மலேசியா மொழியிலும், மலேசியா சென்றபோது தாய்லாந்து மொழியிலும் பேசியிருக்கிறார். இதில் எவருக்கும் எதுவும் புரியவில்லை. இந்த தகவலை ஒரு பத்திரிகையாளர் என்னிடம் சொல்லியுள்ளார்.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................