ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை: ப.சிதம்பரம்

காங்கிரஸ் ஒரு மாற்று அரசாங்கத்தைக் காண விரும்புகிறது, அது முற்போக்கானது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்கவில்லை: ப.சிதம்பரம்

காங்கிரசுக்கு பிரதமர் பதவி என்பது ஒரு பிரச்சனை அல்ல என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


Chennai: 

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதே எங்களது நோக்கமாக உள்ளது என்றும் முன்னாள் மத்திய அமைச்சசர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தேர்லுக்கு பின்னர் நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தான் பிரதமர் யார் என்பது தேர்வு செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எங்கும் கூறவில்லை. மாறாக ஒரு சிலர் அவ்வாறு கூறியதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதனை மறுத்து இதனை பற்றி பேசக்கூடாது என தடை விதித்தது என நியூஸ் 18 தமிழுக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை பொறுத்தவரையில் பிரதமர் பிரச்னையே எங்களுக்கு கிடையாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியும் தான் பிரதமர் வேட்பாளர் என்று எங்கும் கூறவில்லை. காங்கிரசும் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என எங்கும் கூறவில்லை. கூட்டணி வெற்றி பெற்ற பின்னர், கூட்டணி உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்த பின்னரே இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும், சிதம்பரம் கூறும்போது காங்கிரஸ் ஒரு மாற்று அரசாங்கத்தைக் காண விரும்புகிறது, அது முற்போக்கானது என்றும் கூறியுள்ளார்.
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................