"மத்தியப்பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்!" - குற்றம்சாட்டும் காங்கிரஸ்

மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40 சதவிகிதமாக வளர்ந்துள்ளது? நாங்கள் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்காளரின் பெயர் 26 முறை பதிவாகியுள்ளது

The BJP in Madhya Pradesh has said the lists should be investigated and the flaws are removed.

ஹைலைட்ஸ்

  • அறுபது லட்ச போலி வாக்காளர்கள் பட்டியலுடன் புகார்
  • தவறுகளை களைய நான்கு சிறப்பு குழுக்கள்
  • நான்கு நாள் அவகாசத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு
Bhopal: இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள மத்தியப்பிரதேச மாநிலப் பொதுத் தேர்தலுக்குள் அம்மாநில வாக்காளர் பட்டியலில் உள்ள நூற்றுக்கணக்கான குழப்பங்களைத் தீர்க்குமாறும் போலி வாக்களர்கள் குறித்த பிரச்னையின் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறுபது லட்ச போலி வாக்காளர்கள் நிறைந்த பட்டியலுடன் தேர்தல் ஆணையத்திடம் மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

இதையடுத்து "வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு தவறுகள் களையப்பட வேண்டும்" என மாநில தேர்தல் ஆணையம் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது. மேலும், தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் நான்கு குழுவினருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்த விசாரணையில் மேற்சொன்ன நான்கு குழுக்களும் இன்றிலிருந்து தங்கள் வேலையைத் தொடங்கி இன்னும் நான்கு நாள் அவகாசத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரான கமல் நாத் கூறுகையில், “மத்திய பிரதேச மாநிலத்தின் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள 60 லட்சம் போலி வாக்காளர்களின் கணக்கை முக்கிய ஆதாரமாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளோம். தெரிந்தேதான் வாக்களார்கள் பட்டியலில் போலி வாக்காளர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் ஆகும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் மூத்தத் தலைவர் ஜோதிர்ஆதித்யா சிண்டியா கூறுகையில், “இது ஆளும் பாஜக-வின் தவறு. அதெப்படி, ஒரு மாநிலத்தின் மக்கள் தொகை பத்து ஆண்டுகளில் 24 சதவிகிதம் வளரும் போது, அந்த மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40 சதவிகிதமாக வளர்ந்துள்ளது? நாங்கள் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்காளரின் பெயர் 26 முறை பதிவாகியுள்ளது” எனக் குற்றம் சுமத்தினார்.

இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையர் சலீனா சிங், “நாங்கள் போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்கி வருகிறோம். இதுவரையில் 3.86 லட்ச வாக்காளர்களின் பெயர்கள்தான் நீக்கப்பட்டுள்ளது. 60 லட்சம் போலி வாக்காளர்கள் எல்லாம் இருக்கமாட்டார்கள். நான் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். போலி வாக்காளர்கள் பிரச்சனையின் மீது என் தொடர் கண்காணிப்பு இருக்கும்” எனக் கூறினார்