This Article is From May 24, 2019

படுதோல்வி: காங்கிரஸ் 17 மாநிலத்திலும், பாஜக 4 மாநிலத்திலும்

17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடங்களைப் பெற்றதாக அமித் ஷா தெரிவித்தார்.

படுதோல்வி: காங்கிரஸ் 17 மாநிலத்திலும், பாஜக 4 மாநிலத்திலும்

காங்கிரஸ் 51 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

New Delhi:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரு இடத்தைக் கூடப் பெறவில்லை. காங்கிரஸ்க்கு 51 இடங்கள் மட்டுமே கிடைத்தது. 

பாஜக தலைமையகத்தில் நடந்த வெற்றி விழாவின் போது பாஜக தலைவரான அமித் ஷா இந்த உண்மையை  கூறினார்.

ஆந்திரா, அருணாசல பிரதேசம், டெல்லி, குஜராத். ஹரியானா. ஹிமாச்சல், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர், மிசோரம், ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரகாண்ட், அந்தமான் மற்றும் நிகோபர், சண்டிகர், தாதர் நகர், ஹவேலி, டாமன் டையூ மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. 

பாஜக மூன்று மாநிலத்திலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் ஒரு இடத்தைக் கூட பெறவில்லை. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில்  கூட வெற்றி பெறவில்லை. 17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இடங்களைப் பெற்றதாக அமித் ஷா தெரிவித்தார்.

காலை 9:30 மணியளவில்  இந்திய தேர்தல் ஆணையத்தின் படி பாஜக 135 தொகுதிகளில் வெற்றி பெற்று 168 தொகுயில் முன்னணியில் உள்ளது. காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

.