பிரதமர் மோடியின் மெட்ரோ ரயில் பயணம்… வறுத்தெடுத்த காங்கிரஸ்!

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நேற்று மத்திய டெல்லியில் (Delhi) இருந்து தவார்காவுக்கு மெட்ரோ ரயில் (Metro Train) மூலம் பயணம் செய்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
பிரதமர் மோடியின் மெட்ரோ ரயில் பயணம்… வறுத்தெடுத்த காங்கிரஸ்!

வியாழக் கிழமை பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்தார்


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. கச்சா எண்ணெய் விலையேற்றமே, எரிபொருள் விலையேற்றத்துக்குக் காரணம், அரசு
  2. தவார்காவுக்கு செல்ல மோடி, மெட்ரோவில் பயணம் செய்தார்
  3. எரிபொருள் விலையேற்றமே மோடியின் பயணத்துக்குக் காரணம், காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நேற்று மத்திய டெல்லியில் (Delhi) இருந்து தவார்காவுக்கு மெட்ரோ ரயில் (Metro Train) மூலம் பயணம் செய்தார். போக்குவரத்து நெரிசல் உருவாவதைத் தடுக்க இந்த பயணத்தை பிரதமர் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய அளவில் ‘பாரத் பந்த்’ நடத்தப்பட்டது. எதிர்கட்சிகளும் தொடர்ந்து எரிபொருள் விலையேற்றத்துக்கு மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றன.

ரூபாய் வீழ்ச்சியும் கச்சா எண்ணெய் விலையேற்றமுமே எரிபொருள் விலையேற்றத்துக்குக் காரணம் என்றும், அரசு அது குறித்து எதுவும் செய்ய முடியாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதே நேரத்தில் மேற்கு வங்கம், கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியைக் குறைத்துள்ளது. இதனால் அம்மாநிலங்களில் சிறிய அளவு எரிபொருள் விலை குறைந்துள்ளது. ஆனால் விலையேற்றுத்துக்கு மத்திய அரசு இதுவரை எந்த நடவிடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று தவார்காவில் ஒரு கன்வென்ஷன் மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்தார் பிரதமர் மோடி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ள காங்கிரஸ், ‘டெல்லியில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், பிரதமர் மோடி மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்துள்ளார். இல்லையென்றால், இதுவும் தேர்தலுக்காக எடுக்கப்படும் வெற்று நடவடிக்கையா?’ என்று பதிவிட்டுள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................