காஷ்மீர் விவகாரம்: ஐ.நாவின் மத்தியஸ்த கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!

ஜம்மு-காஷ்மீரின் நிலைமை "ஆழ்ந்த கவலை" அளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் கூறியதை தொடர்ந்து, இந்தியா பதில் அளித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நாவின் மத்தியஸ்த கோரிக்கையை நிராகரித்தது இந்தியா!

இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தால் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

New Delhi:

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸின் மத்தியஸ்த கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. அதற்கு பதிலாக "சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள" பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் நிலைமை "ஆழ்ந்த கவலை" அளிப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் கூறியதை தொடர்ந்து, இந்தியா இவ்வவாறு பதில் அளித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. 

பாகிஸ்தான் சென்றிருந்த ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ், இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்தால் ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

ஐ.நா பொதுச்செயலாளரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இதில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை என்னவென்றால், "சட்டவிரோதமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துள்ள" பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்பது தான் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தாலும், இருதரப்பு ரீதியாக விவாதிக்கப்படும் என்று கூறிய அவர், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு எந்த தேவையும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தையும் இந்திய மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மனித உரிமை மீறல்களையும் தடுக்க அந்நாட்டு அரசிடம் ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் அறிவுறுத்துவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்

(With inputs from PTI)

Listen to the latest songs, only on JioSaavn.com