This Article is From Jun 23, 2019

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கையை இந்தியா நிராகரித்தது

மத சுதந்திரம் குறித்த அறிக்கையில் இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து தீவிரவாத கும்பல் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்துகின்றன என்று அதில் தெரிவித்துள்ளனர்.

மத சுதந்திரம் குறித்த அமெரிக்க அறிக்கையை இந்தியா நிராகரித்தது

இந்திய அரசியலமைப்பு குடிமக்களின் உரிமையை பாதுக்காக்கிறது

ஹைலைட்ஸ்

  • பசு குண்டர்கள் நடத்தி தாக்குதலை அரசு கண்டு கொள்ளவில்லை -அமெரிக்க அறிக்கை
  • இந்திய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது
  • பாஜக இந்த அறிக்கையை ஒரு சார்புடமையானது என்று விமர்சித்துள்ளது
New Delhi:

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட மத சுதந்திரம் குறித்த அறிக்கையில் இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இந்து தீவிரவாத கும்பல் ஆண்டு முழுவதும் தாக்குதல் நடத்துகின்றன என்று அதில் தெரிவித்துள்ளனர். 

இந்த அறிக்கைக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் “வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து எந்தவொரு நற்பெயரையும் இந்தியா எதிர்பார்க்கவில்லையென்றும் இந்திய அரசியலமைப்பு குடிமக்களின் உரிமையை பாதுக்காக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு, மிகப்பெரிய ஜனநாயக நாடு. சகிப்புத்தன்மை மற்றும் நீண்ட கால அர்பணிப்பு கொண்ட ஒரு பன்மைத்துவ சமூகம். இந்திய அரசியலமைப்பு அதன் சிறுபான்மை சமூகங்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் அடிபடை உரிமைகளை உறுதி செய்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை ஒருசார்புடைமையானது என்றும் கூறியுள்ளார்.  இந்திய அரசியலமைப்பு மத சுதந்திரத்தை பாதுகாக்கிறது. மேலும் ஜனநாயக நிர்வாகம் அடிப்படை உரிமைகளை மேலும் பாதுக்காக்கும் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணைய தளத்தில் சர்வதேச மத சுதந்திரம் குறித்த அறிக்கை 2018 கிடைக்கிறது. அரசு ‘பசு குண்டர்களின்' தாக்குதலகள், குழு வன்முறை ஆகியவற்றுக்கு எதிராக செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளது. 

பாஜகவும் இந்த அறிக்கையை குறைபாடுடையது என்று நிராகரித்துள்ளது. சிறுபான்மையினர் மீதான வன்முறைக்கு பின்னால் பெரிய திட்டம் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்ட யூகமே தவறானது என்று பாஜக ஊடகத் தலை

.