This Article is From Apr 11, 2019

அதிகளவில் வாக்களித்து சாதனைப் படைக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

7 கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று முதல் தொடங்குகிறது

அதிகளவில் வாக்களித்து சாதனைப் படைக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்

முதற்கட்ட மக்களவைத் தேர்தல் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறுகிறது.

New Delhi:

பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவும் சரியாக இன்று காலை 7 மணி அளவிலே, அதிகளவிலான மக்கள் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும் என தங்களது டிவிட்டர் பதிவில் மக்களை ஊக்குவித்தனர்.

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 18 மாநிலங்களிலும், 2 இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் 91 தொகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது.

இதேபோல் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்கள் அதிகளவில் வாக்களித்து சாதனைப் படைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில், 2019 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கிவிட்டது. முதல்கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும். முதல்முறையாக வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, செவ்வாயன்று மகராஷ்டிராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, முதல் முறை வாக்களர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது பிரசார உரையில் கூறியிருந்தார்.

இதேபோல், பாஜக தலைவர் அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில், ஒரு வலிமையான, தொலைநோக்கு மற்றும் நேர்மையான தலைமையால் மட்டுமே காஷ்மீர் முதல் அந்தமான் வரை உள்ள மக்கள் வளர்ச்சி பெறுவதற்கு இயங்க முடியும்.

வடகிழக்குப் பகுதிகளில் அமைதி தொடர வேண்டும் என்றால், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோராம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில சகோதர, சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன், அதிகளவில் வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதேபோல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டிவிட்டர் பதிவில், இன்றைய நாள், 91 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் ஒரு மாபெரும் நாளாகும். இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதேபோல், காங்கிரஸ் கட்சியின் அதிகார்ப்பூர்வு டிவிட்டர் பதிவில், வெறுப்புக்கு எதிரான அன்பை பெற, பக்கோடா விற்பனை செய்யமால் வேலைவாய்ப்பை ஏற்படுத்த காங்கிரஸூக்கு வாங்களியுங்கள். உங்களுக்காக வாக்களியுங்கள் என்று அதல் தெரிவிக்கப்பட்டது.

.