கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து! - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பழனி கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டதாக தெரிகிறது.

கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து! - ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

Coimbatore:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இன்று அதிகாலையில் கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, விபத்தில் சிக்கியவர்கள் கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பழனி கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இன்று அதிகாலை பொள்ளாச்சியில் கெடிமேடு என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஒராமா உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கிரேன் உதவியுடன் காரை மீட்டுள்ளனர். அதில் 6 பேரின் உடல்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.