This Article is From Nov 14, 2018

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்த சி.என்.என்!

அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்த சி.என்.என்!

அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சி.என்.என், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது அதிகாரிகளுக்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் ஜிம் அகோஸ்டா எனும் நிருபருக்கு மீண்டும் வெள்ளை மாளிகை நிருபர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வாரம் நடந்த அதிபருடனான செய்தியாளர் சந்திப்பில் அகோஸ்டா கேட்ட கேள்விக்கு சி.என்.என் தொலைகாட்சியை விமர்சித்தும், செய்தியாளரிடம் முறையற்ற விதமாக அதிபர் நடந்து கொண்டார். ஆனால், அதிபர் சந்திப்பில் தவறாக நடந்துகொண்டதாக அகோஸ்டாவின் அனுமதியை வெள்ளை மாளிகை ரத்து செய்தது.

இதற்காக அமெரிக்க மாகாண நீதிமன்றத்தில் சி.என்.என் தொலைக்காட்சி வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் அதிபர் ட்ரம்ப், அதிகாரிகள் ஜான் கெல்லி, சரா சாண்டர்ஸ் உள்ளிட்ட்ட 6 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. அகோஸ்டவின் அனுமதி ரத்து செய்யப்பட்டதை காரணமாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

"விரைவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும். பின்னர் அகோஸ்டா வெற்றிகரமாக வெள்ளை மாளிகை அனுமதியை பெறுவார்" என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.

.