Edappadi: நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்துக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
Edappadi: நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். 

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்துக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். 

அங்கு, தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதலமைச்சர், அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

முதல்வருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரும் உடன் சென்றனர். இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டனர்.

அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். 

அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் துபாய் சென்றடைந்தனர்.

அங்கு அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இதற்காக சென்னை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் துபாயில் முகாமிட்டுள்ளனர். 

முதலமைச்சர் தனது 13 நாள் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்ப இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................