புலிக்கு 'தண்ணி' காட்டிய வாத்து! வைரல் வீடியோ

சிறுத்தை சிக்கும், சிறுவண்டு சிக்காது என்பது இதுதான் போல.

புலிக்கு 'தண்ணி' காட்டிய வாத்து! வைரல் வீடியோ

புலியின் வேட்டையில் இருந்து சாமர்த்தியமாக தப்பிய வாத்து

ஹைலைட்ஸ்

  • எதையும் பொறுத்திருந்து, சாமர்த்தியமாக வேட்டையாடும் விலங்கு புலி
  • புலிக்கே தண்ணி காட்டும் வாத்து
  • இன்று வரையில் சிறந்த வீடியோவாக பார்க்கப்படுகிறது

சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது என்பார்கள். அந்த கதை தான் அரங்கேறியுள்ளது. எதையும் சாமர்த்தியமாக வேட்டையாடும் விலங்கு புலி. இரையைப் பார்த்ததும் நல்ல பொறுமையாக, தரையோடு தரையாக மறைவாக இருந்து, மெதுவாக நடந்து சட்டென்று ஒரே கடியாக கழுத்தை கவ்வி வேட்டையாடும். 

இப்படி சாமர்த்தியமாக வேட்டையாடும் புலிக்கே ஒரு உயிரினம் தண்ணி காட்டும் என்றால் அது வாத்தாக தான் இருக்கும். இது பழைய வீடியோ தான் என்றாலும், இன்று வரையிலும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரு வனவிலங்கு பூங்காவில் புலிகள் இருக்கும் நீர்நிலையில், அதற்கு இரையாக பூங்கா ஊழியர்கள் வாத்து ஒன்றை விட்டுவிடுகிறார்கள். வாத்து நீரில் நீந்திக் கொண்டிருக்க, அதனை வேட்டையாட புலி மெல்ல வருகிறது. நீரில் சத்தமே எழாத வகையில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறது.

சரியாக வேட்டையாட பாய்ந்து வரும் போது தான், வாத்துவின் சாமர்த்தியம் தெரிகிறது. பொதுவாக மற்ற எல்லா பறவைகளும் யாராவது தாக்க வந்தால் உடனே பறந்து விடும். ஆனால், வாத்தோ தன்னை புலி தாக்க வருகிறது என்று அறிந்ததும் பறக்க முயற்சிக்காமல், தண்ணீருக்குள் மூழ்கி விட்டது. 

வாத்துவின் இந்த சாமர்த்தியத்தால் புலியின் பிடியில் இருந்து தப்பியது. புலி வாத்தை தேட, புலிக்குப் பின்னால் மீண்டும் தண்ணீருக்கு மேல் வாத்து வருகிறது. இவ்வாறு பல முறை முயற்சி செய்தும் புலியால் வாத்தை பிடிக்க முடியவில்லை.
 

இந்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் நேற்று ஒருவர் இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டும் பகிர, அடுத்த சில மணி நேரங்களில் 26 ஆயிரம் பார்வைகளைப் பெற்றது. 

Click for more trending news