உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக கோகாயை நியமிக்க தீபக் மிஸ்ரா பரிந்துரை

அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் தீபக் மிஸ்ராவின் பதவி அக்டோபர் 1 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
New Delhi: 

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிக்கலாம் என பரிந்துரைத்து தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மூத்த நீதிபதி கோகாய் அக்டோபர் 3 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார். 

அக்டோபர் 2 ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் தீபக் மிஸ்ராவின் பதவி அக்டோபர் 1 ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. 

உச்ச நீதிமன்றத்தின் வழக்கப்படி, தலைமை நீதிபதியின் பதவிக்காலம் நிறைவு பெற்றால், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி, தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்பார். நெறிமுறைகளின்படி அடுத்த தலைமை நீதிபதியை நியமனம் செய்வது தொடர்பாக தீபக் மிஸ்ராவிடம் மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பாக கருத்து கேட்டிருந்தது.

இந்த நிலையில் கோகாயின் பெயரை பரிந்துரை செய்து மிஸ்ரா கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் 3 ம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்கும் கோகாய், அடுத்த ஆண்டு நவம்பர் 17 ம் தேதி வரை அந்த பதவியில் தொடருவார். புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். 

புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்கவுள்ள ரஞ்சன் கோகாய் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 1954 ஆம் ஆண்டு பிறந்தவர். வழக்கறிஞராக 1978 இல் பணிக்குச் சேர்ந்த அவர் கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2001 பிப்ரவரி 28 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். 

2010 இல் பஞ்சாப் - ஹரியானா நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்படட கோகாய் 2011 இல் பதவி உயர்வு பெற்று தலைமை நீதிபதி ஆனார். 

பின்னர் 2012 இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். மென்மையாக பேசக்கூடியவர் என்றும், கண்டிப்பு குணம் கொண்டவர் என்றும் அவர் பெயர் பெற்றுள்ளார். 

கடந்த ஜனவரியின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதிக்கு எதிராக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினர். அப்போது தலைமை நீதிபதி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். 

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டிய 4 நீதிபதிகளில் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி.) தொடர்பான வழக்கை கோகாய் விசாரித்து வருகிறார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................