This Article is From Dec 17, 2019

Civil Services Exam 2020: வேகமா தயாராகிக்கோ.... இந்த முறை சீக்கிரமே தேர்வு வரப்போகுது...!

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (upsc.gov.in) கிடைக்கும்

Civil Services Exam 2020: வேகமா தயாராகிக்கோ.... இந்த முறை சீக்கிரமே தேர்வு வரப்போகுது...!

நாட்டில் நடக்கும் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றாகும். இதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்கிறார்கள்

New Delhi:

சிவில் சர்வீசஸ் தேர்வு 2020க்கான விவர ஆணையினை ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பிப்ரவரி 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.  இந்திய அரசு பணிக்களுக்கான தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்க்காக அமைக்கப்பட்ட ஒரு தனி அமைப்பாகும். 

நாட்டில் நடக்கும் மிகப்பெரிய தேர்வுகளில் ஒன்றாகும். இதற்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்கிறார்கள். இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) இந்திய காவல் சேவை (ஐ.பி.எஸ்) இந்திய வன சேவை (ஐ.எஃப்.எஸ்) போன்றவை குடிமையியல் சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. பிரிவு 320இன் கீழ் நியமிக்கப்பட்டுள்ள படி சிவில் சர்வீசஸ் நியமனம் செய்வதற்கான தேர்வினை யூ.பி.எஸ்.சி நடத்துகிறது. 

யூ.பி.எஸ்.சி தேர்வுகள் கடுமையான செயல்முறையை உள்ளடக்கியது. இதில் முதனிலை மற்றும் பிரதான தேர்வு ஆகியவை அடங்கும். முதனிலை தேர்வில்  வெற்றி பெற்றவர்கள் பிரதான தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். பிரதான தேர்வில் 1750மதிப்பெண்களுக்கும் நேர்காணல் 275 மதிப்பெண்ணையும் கொண்டிருக்கும்.

சிவில் சர்வீசஸ் தேர்வு 2020: முக்கிய தேதிகள்

அறிவிப்பு: பிப்ரவரி 12
பதிவு தேதி: பிப்ரவரி 12 முதல் மார்ச் 3 வரை
முதனிலை தேர்வு தேதி: மே 31

இந்த முறை, கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சிவில் சர்வீஸ் தேர்வு சீக்கிரமே ஆரம்பிக்கப்படவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், முதனிலை தேர்வு ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

முதனிலை தேர்வு என்பது பிரதான தேர்வுக்கான வடிகட்டும் சோதனையாகவே உள்ளது. மேலும் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் தகுதியை தீர்மானிக்க கணக்கிடப்படுவதில்லை.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  (upsc.gov.in) கிடைக்கும்

.