குடியுரிமை சட்ட திருத்த மசோதா அடிப்படையாகவே அரசியலமைப்பிற்கானதல்ல - சசி தரூர்

நம் நாடு அனைவருக்குமானது. மதத்தை பொருட்படுத்தாமல், இந்த நாட்டில் சம உரிமை உண்டு அவர்கள் எழுதிய அரசியலமைப்பு இதை பிரதிபலித்தது. இந்த மசோதா அரசியலைமைப்பின் அடிப்படை கொள்கையை குறைக்கிறது என்று தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா அடிப்படையாகவே அரசியலமைப்பிற்கானதல்ல - சசி தரூர்

முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது (File)

New Delhi:

குடியுரிமை திருத்த மசோதாவை காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் அரசியலைப்பின் அடிப்படை கொள்கையை குறைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இன்று பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டத் திருத்த  மசோதாவை மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. 

“இந்த மசோதா அடிப்படையில் அரசியலமைப்பிற்கு முரணானது. ஏனெனில் இதில் இந்தியாவின் அடிப்படை நோக்கங்கள் மீறப்பட்டுள்ளன. நாங்கள் எப்போதும் எங்கள் சிந்தனைகள் என்பது மகாத்மா காந்தி, நேரு, மவுலானா ஆசாத், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டது என்று வாதிட்டு இருக்கிறோம். ஆதலால், மதம் ஒருவரின் தேசியத்தைத் தீர்மானிக்க முடியாது.

நம்முடைய நாடு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது. மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் தேசம். அதைத்தான் நமது அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது. ஆனால், இந்த மசோதா, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறை குறைத்து மதிப்பிடுகிறது