மங்களூரு, லக்னோவில் நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு! - இணைய சேவை முடக்கம்!

லக்னோவை தவிர்த்து ஹாசியாபாத், பிலிபித், சாம்பால், பாரேய்லி மற்றும் மீரட் உள்ளிட்ட பகுதிகளிலும் இணை சேவை முடக்கப்பட்டது. தொடர்ந்து, லக்னோவில் சனிக்கிழமை நண்பகல் வரை இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது.

மங்களூரு, லக்னோவில் நடந்த வன்முறையில் 3 பேர் உயிரிழப்பு! - இணைய சேவை முடக்கம்!

Citizenship Amendment Act Protests: மங்களூரில் சனிக்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Lucknow:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்களின் போது, மாநிலத்தில் பெரிய அளவிலான வன்முறைகள் நடந்ததை தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோ உட்பட பல பகுதிகளில் இணைய சேவை மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. 

உத்தரபிரதேச நடந்த வன்முறையை தொடர்ந்து, அங்கு மாநிலம் முழுவதும் பெரிய அளவில் கூட்டங்கள் கூடுவதற்கு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. 

லக்னோவில் நடந்த போராட்டங்களைத் தடுக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில், கிட்டத்தட்ட 10 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. சம்பல் பகுதியில் ஒரு பேருந்து எரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியிலும் போராட்டம் நடந்தது.

லக்னோவை தவிர்த்து ஹாசியாபாத், பிலிபித், சாம்பால், பாரேய்லி மற்றும் மீரட் உள்ளிட்ட பகுதிகளிலும் இணை சேவை முடக்கப்பட்டது. தொடர்ந்து, லக்னோவில் சனிக்கிழமை நண்பகல் வரை இணையம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தரவை தொடர்ந்து, அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சேவையை முடக்கிவிட்டனர். 

டிசம்பர் 21 நள்ளிரவு வரை மாநிலத்தின் பிற பகுதிகளில் இணைய சேவை நிறுத்தம் தொடரும் என்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.

இதனிடையே, கர்நாடகாவின் மங்களூரு பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு உயிரிழந்துள்ளனர் என்பதை நகர காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து., அங்கு சனிக்கிழமை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 
 

More News
Listen to the latest songs, only on JioSaavn.com