This Article is From Jan 19, 2020

’எந்த மாநிலமும் CAA-வை அமல்படுத்த முடியாது என்று சொல்லமுடியாது’: கபில்சிபில்

கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவில் கலந்து கொண்ட கபில்சிபில் பேசியதாவது, அடிப்படையில் சொல்லப்படுவது என்னவென்றால், யூனியன் ஆஃப் இந்தியாவுடன் ஒத்துழைக்க மாநில அளவிலான அதிகாரிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... நடைமுறையில், அது சாத்தியமா என்று எனக்குத் தெரியாது.

CAA, NRC குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சிபில்

Kozhikode, Kerala:

CAA குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்து வரும் நிலையில், சிஏஏ-வுக்கு எதிராக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சிபில் கூறும்போது, எந்த மாநிலமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார். 

குடியுரிமைச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றில் அதிருப்தி அடைந்துள்ளதாக பல மாநிலங்கள் மத்திய அரசுக்கு தகவல் அளிக்கின்றன. ஆனால், NRC என்பது தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அடிப்படையாக கொண்டது. அதனை உள்ளூர் பதிவாளரால் செயல்படுத்த வேண்டும், மாநில அளவிலான அதிகாரிகளால் நியமிக்கப்படுகிறார். 

கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய விழாவில் கலந்து கொண்ட கபில்சிபில் பேசியதாவது, அடிப்படையில் சொல்லப்படுவது என்னவென்றால், யூனியன் ஆஃப் இந்தியாவுடன் ஒத்துழைக்க மாநில அளவிலான அதிகாரிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... நடைமுறையில், அது சாத்தியமா என்று எனக்குத் தெரியாது. 

அரசியலமைப்பு ரீதியாக, எந்தவொரு அரசும் 'நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நான் பின்பற்ற மாட்டேன்' என்று சொல்வது கடினம், "என்று அவர் கூறினார்.
 


CAAக்கு எதிரான போராட்டத்தில்" மற்ற கட்சிகள் காங்கிரஸை பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும். "இது தேசிய அரசியலைப் பற்றி இருக்கும்போது, இது ஒரு தேசிய சட்டம் என்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனவே, நாங்கள் அரசியல் ஆதாயம் தேடவில்லை. நாம் செய்ய வேண்டியது அரசியல் ரீதியாக ஒன்றிணைவதுதான் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, குடியுரிமைச் சட்டத்தை "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று கூறிய அவர், அதற்கு எதிரான போராட்டங்கள் தொடர வேண்டும் என்றார். மேலும், ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் அதை திரும்பப் பெறுவதற்கும் அரசியலமைப்பில் உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளார். 

கபில் சிபலின் கருத்துக்களை மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான சல்மான் குர்ஷித்தும் எதிரொலித்துள்ளார். "உச்சநீதிமன்றம் தலையிடாவிட்டால் (குடியுரிமைச் சட்டத்தில்) அது சட்ட புத்தகத்தில் இருக்கும். ஏதேனும் சட்ட புத்தகத்தில் இருந்தால், நீங்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும், இல்லையெனில் விளைவுகள் ஏற்படக்கூடும்" என்றும் அவர் கூறினார். 

.