This Article is From Mar 17, 2020

''சி.ஏ.ஏ. சட்டப்பூர்வமானது; நீதிமன்றத்தால் அதனை கேள்வி எழுப்ப முடியாது'' - மத்திய அரசு!!

குடியுரிமை சட்டம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயமாகும். இதனை நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

''சி.ஏ.ஏ. சட்டப்பூர்வமானது; நீதிமன்றத்தால் அதனை கேள்வி எழுப்ப முடியாது'' - மத்திய அரசு!!

உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

New Delhi:

உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கில் பதில் அளித்துள்ள மத்திய அரசு, 'குடியுரிமை சட்டம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயமாகும். இதனை நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது' என்று தெரிவித்துள்ளது.

'நாடாளுமன்றம் மட்டுமே குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கேள்வி எழுப்ப முடியும்' என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் எனக் குடியுரிமை சட்டத்திருத்தம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

அரசியலமைப்பு சட்டம் 246-ன்படி, நாடாளுமன்றத்திற்கு மட்டுமே குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து கேள்வி எழுப்பும் அதிகாரம் உள்ளது. 

இந்தியக் குடிமக்களின் உரிமை எதையும் குடியுரிமை சட்டத்திருத்தம் பாதிக்காது. மக்களின் ஜனநாயக, சட்ட உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. இந்த சட்டத்தின்கீழ் யாரும் வெளியேற்றப்பட மாட்டார்கள். 

குடியுரிமை சட்டம் என்பது சட்டப்பூர்வமானது மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது. குடியுரிமை சட்டம் நாடாளுமன்றத்தின் இறையாண்மை தொடர்பான விஷயமாகும். இதனை நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியாது

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வருவோரின் நலனை நாடாளுமன்றம் கவனத்தில் கொள்கிறது. 

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைவருக்கும் சம பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சொல்கிறது. அதேநேரத்தில் தகுந்த காரணம் இருந்தால் குறிப்பிட்ட சில குழுக்களுக்கும் இந்த சட்டப்பிரிவு  பொருந்தும் என, உச்ச நீதிமன்றம் 20-க்கும் மேற்பட்ட தீர்ப்புகளை அளித்துள்ளது. 

இங்கு, முஸ்லிம் நாடுகளாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தில் மத ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 6 சமூகத்தவர்களை, தகுந்த காரணம் கொண்ட குழுக்களாக மத்திய அரசு கருதுகிறது. 

இவ்வாறு மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.