கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்: பிரதமர் மோடி பேச்சு!

"கொரோனா பாதிப்பால் இதுபோன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது.

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்: பிரதமர் மோடி பேச்சு!

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்: பிரதமர் மோடி பேச்சு!

New Delhi:

கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில், வேகமான வளர்ச்சிக்கான பாதையில் இந்தியாவை மீண்டும் கொண்டு வருவதற்கு, ஐந்து விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, புதுமை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய தேவை என்பது இந்திய தயாரிப்புகள் தான். இந்திய தயாரிப்புகள் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டும். நாம் இறக்குமதியை குறைப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சில் முக்கியம்சங்கள்

 • "கொரோனா பாதிப்பால் இதுபோன்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக இருக்கிறது."
 • கொரோனா வைரஸை எதிர்த்து போராட நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.

 • விவசாயம், சுயதொழில் செய்வோர், தொழில் முனைவோர், தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும்.

 • கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. 

 • விவசாயப் பொருட்களை மின்னணு வர்த்தகம் மூலமாகவும் விற்பனை செய்யலாம்.

 • ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிகரமாக இருக்கின்றன.

 •  இந்தியா சுயசார்பு நாடாக வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கையை எடுக்க தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.

 • வேகமான வளர்ச்சிக்கான இந்தியாவை மீண்டும் பாதையில் கொண்டு வருவதற்கு, ஐந்து விஷயங்கள் மிக முக்கியமானவை: நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, புதுமை.

 • லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் இயந்திரங்கள். இந்திய பொருளாதாரத்திற்கு இந்த சிறு, குறு நிறுவனங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 

 • "வளர்ச்சியைத் திரும்பப் பெறுவது என்பது அவ்வளவு கடினமானது அல்ல. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அனைவரும் - தொழில்துறை அலகுகள் - ஒரு தெளிவான பாதையைக் கொண்டிருக்கிறீர்கள்.

 •  "காலத்தின் தேவை என்னவென்றால், அதிகமான தயாரிப்புகள் "மேக் இன் இந்திய" ஆகும், அவை உலகத்திற்காக தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். தொடர்ந்து, இறக்குமதியைக் குறைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்."