மக்களுடன் நடனமாடிய காவல் அதிகாரிகள்

“மக்களுடன் விடுமுறையை கொண்டாடியதில் மகிழ்ச்சி” என ட்வீட் செய்துள்ளனர்.

மக்களுடன் நடனமாடிய காவல் அதிகாரிகள்

நடன குழுவின் நடனத்தை நிறுத்துவது போல் வந்தனர் அந்த காவல்துறையினர்

Miami, Florida:

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் திருவிழா களைகட்ட துவங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள அவந்துரா மால் ஒன்றிக்கு வந்திருந்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு வந்த ஒரு நடன குழு, திடீர் என ப்ளாஷ் மாப் (Flah Mob) துவங்கியது. அவர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்திய மக்கள் இடையே திடீர் என சலசலப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் அங்கு வந்த இரு காவல் அதிகாரிகள்.ப்ளாஷ் மாப்பை நிறுத்துவது போல் வந்தனர் அந்த அதிகாரிகள்.

ஆனால் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த காவல் துறை அதிகாரிகளும் நடன குழு உடன் சேர்ந்து நடனமாடினர்.பலத்த கரகோஷம் மூலம் தங்கள் சந்தோஷத்தை அங்கு கூடி இருந்த மக்கள் வெளிபடுத்தினர்.

 

 

இந்த வீடியோவை ட்வீட்டரில் பகிர்ந்த அந்த சிட்டி காவல்துறையினர், “மக்களுடன் விடுமுறையை கொண்டாடியதில் மகிழ்ச்சி” என ட்வீட் செய்துள்ளனர்.

Click for more trending news


More News