This Article is From Sep 11, 2019

பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டினார் : பாஜக சின்மயானந்த் மீது குற்றச்சாட்டு

சின்மயான்ந்த் அக்டோபரில் அந்த பெண்ணை ஹாஸ்டலில் தங்கச் சொன்னார். பின்னர் அவர் தனது ஆசிரமத்திற்கு அழைத்ததாகவும். தான் ஹாஸ்டலில் குளிக்கும் வீடியோவை த் தனக்கு காட்டியதாகவும். “அதை வைரலாக்கிவிடுவேன்” என்று பயமுறுத்தியதாகவும் கூறினார்

சின்மயாந்த் குற்றச்சாட்டுகளை நிராகரித்து அரசியலில் தன்னை வீழ்த்த சதி மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

ஹைலைட்ஸ்

  • சட்ட கல்லூரி மாணவியை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
  • ஹாஸ்டலில் குளிக்கும் போது வீடியோ எடுத்துள்ளதாக மாணவி கூறுகிறார்.
  • அந்த வீடியோவை வைரலாக்கியுள்ளதாக தெரிவித்தார்.
New Delhi:

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சின்மயானந்த்தான்  இதுவரை காவல்துறையினரால் விசாரிக்கப்படவில்லை என்று உத்திர பிரதேச சட்ட கல்லூரி மாணவி குற்றம் சாட்டியுள்ளார். அரசியல்வாதி என்பதால் இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. 

23 வயதான பெண் டெல்லி  காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியோருக்கு அளித்த அறிக்கையில் பல ஆசிரமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அரசியல்வாதியால் பாலியல் வன்கொடுமைக்கு ஒரு ஆண்டுக்கு முன்னால் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு முன் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறியதாக தெரிய வந்துள்ளது. 

பெண்ணை மட்டும் சுமார் 15 மணி நேரம் விசாரித்து.  அவர் நடத்தும் ஷாஜகான்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டப்படிப்பில் சேருவதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 73 வயதான சின்மயநதந்தை சந்தித்தாக அந்த பெண் தனது 12 பக்க புகாரில் தெரிவித்துள்ளார்.

சின்மயானந்தா தன்னுடைய மொபைல் எண்ணை எடுத்துக் கொண்டு கல்லூரியில் அனுமதி அளித்துள்ளதாக கூறுகிறார். அவர் தன்னை அழைத்ததாகவும் கல்லூரி நூலகத்தில் ரூ5,000க்கு வேலை  வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். 

தனது குடும்பம் ஏழ்மை என்பதால் தான் படித்துக் கொண்டே வேலை செய்ததாக அந்தப் பெண் கூறியுள்ளார். சின்மயான்ந்த் அக்டோபரில் அந்த பெண்ணை ஹாஸ்டலில் தங்கச் சொன்னார். பின்னர் அவர் தனது ஆசிரமத்திற்கு அழைத்ததாகவும். தான் ஹாஸ்டலில் குளிக்கும் வீடியோவை த் தனக்கு காட்டியதாகவும். “அதை வைரலாக்கிவிடுவேன்” என்று பயமுறுத்தியதாகவும். கட்டாயபடுத்து பாலியல் பலாத்காரத்தையும் படமாக்கி பிளாக் மெயிலுக்கு பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். 

அந்த பெண், “தான் அவருக்கு மஜாஜ் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும். பெரும்பாலும் அவரது உதவியாளர்களால் துப்பாக்கி முனையில் கொண்டு வரப்பட்டதாகவும்” குற்றம் சாட்டினார். இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை தன்னை மிரட்டியதாகவும் அவருக்கு எதிராக வீடியோக்களை உருவாக்க அந்த பெண் முடிவு செய்தார். 

கடந்த வாரம் டெல்லியில் வன்புணர்வு  புகார் அளித்தார். உத்தர பிரதேச காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார். “விசாரணையின் போது எந்தவொரு கேள்விக்கும் பதிலளிப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், முதலில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட வேண்டும் . ஷாஜகான்பூர் மாஜிஸ்திரேட் என் தந்தையை அச்சுறுத்தியுள்ளார்.என் விடுதி அறையில் எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. நேரம் வரும் போது எல்லா ஆதாரங்களையும் தருவேன்" என்று செய்தியாளர்களிடம் கூறினார். 

சின்மயாந்த் குற்றச்சாட்டுகளை நிராகரித்து அரசியலில் தன்னை வீழ்த்த சதி மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். 

.