59 சீன செயலிகளுக்குத் தடை விதித்த இந்தியா: ரியாக்ட் செய்த சீனா!!

நேற்று மத்திய அரசு, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

59 சீன செயலிகளுக்குத் தடை விதித்த இந்தியா: ரியாக்ட் செய்த சீனா!!

'இந்த செயலிகளில் இருக்கும் தகவல்கள் மூலம் இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும், சமூக நல்லிணக்கத்துகும் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது'

New Delhi:

பாதுகாப்புக் காரணங்களுக்காக சீனாவின் 59 செயலிகளுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்திய அரசு. இது குறித்து சீன அரசுத் தரப்பு, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், “இந்திய அரசின் உத்தரவு குறித்து ஆராய்ந்து வருகிறோம். மிகவும் கவலையடைந்துள்ளோம்” என்று ரியாக்ட் செய்துள்ளது. 

நேற்று மத்திய அரசு, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. “இந்த செயலிகளில் இருக்கும் தகவல்கள் மூலம் இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும், சமூக நல்லிணக்கத்துகும் குந்தகம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தடை செய்யப்படுகின்றன,” என அறிக்கை மூலம் தடை ஆணைக்கு விளக்கம் கொடுத்தது மத்திய அரசு. 

இந்தியா - சீன ராணுவப் படைகளுக்கு இடையே கல்வான் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சுமார் ஒரு மாதத்துக்கு மேல் இரு தரப்புக்கும் இடையில் உரசல் போக்கு நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்துதான் நாட்டில் மிகவும் பிரபலாம இருந்த டிக்டாக் செயலி, ஹலோ செயலி உள்ளிட்டவைகளுக்குத் தடை விதித்து ஆணைப் பிறப்பித்தது மத்திய அரசு. 

இதையடுத்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய, சீனாவின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஹாவ் லிஜியான், “நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். நிலைமையை ஆராய்ந்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.