This Article is From Mar 01, 2019

சீனாவிலிருந்து பாகிஸ்தான் வந்து போகும் அனைத்து விமானங்களும் ரத்து!

இந்தியாவுடனான தாக்குதல் விஷயத்துக்காக பதட்டம் நிலவுவதால் ஐரோப்பா மற்றும் தெற்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

சீனாவிலிருந்து பாகிஸ்தான் வந்து போகும் அனைத்து விமானங்களும் ரத்து!

வாரந்தோறும் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் வழியாகவும் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சீனா, பாகிஸ்தானிலிருந்து வரும் மற்றும் பாகிஸ்தானுக்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது. அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் இதனை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான தாக்குதல் விஷயத்துக்காக பதட்டம் நிலவுவதால் ஐரோப்பா மற்றும் தெற்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வரும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வரும் விமானங்கள் பொதுவாக பாகிஸ்தான் வழியாக பறக்கும். ஆனால் அவை தற்போது மியன்மர் அல்லது மத்திய ஆசியா வழியாக பயணிப்பதாக க்ளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. 

பீஜிங் சர்வதேச விமானநிலையத்திலிருந்து பாகிஸ்தான் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மீண்டும் அறிவிப்பு வரும் வரை இவை இயங்காது என வடக்கு சீனா வான்வழி போக்குவரத்து தெரிவித்துள்ளது. 

வாரந்தோறும் பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தான் வழியாகவும் 22 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் இரண்டு ஏர்சீனா விமானங்கள் மற்றவை பாகிஸ்தான் ஏர்லைன்ஸை சேர்ந்தவை. 

போர் பதட்டம் காரணமாக பாகிஸ்தான் தனது வழித்தடங்களை மூடியது. இதனால் பாதை மாற்றிவிடப்பட்டன சில விமானங்கள். சீனாவுக்கு வரும் 49 விமானங்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளன. 

இந்தியா நடத்திய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இதனால் எல்லைப்பகுதிகளில் உள்ள இந்திய பாகிஸ்தான் விமான நிலையங்கள் மூடப்பட்டன.

.