நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி! (வீடியோ)

ஒடிசாவின் ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் டீ வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கிய ராஜேஷ் தல்வார் என்ற பயணி, கீழே விழுந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நடைமேடைக்கும் ரயிலுக்கும் நடுவே விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி! (வீடியோ)

ஒடிசாவின் ஜார்சுகுடா ரயில்நிலையித்திலே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Jharsuguda, Odisha: 

ஹைலைட்ஸ்

  1. Man survives horrific accident on train journey to Sambalpur in Odisha
  2. Rajesh Talwar falls between moving train and platform at Jharsuguda
  3. He got down from his train to purchase a cup of tea

ஒடிசாவில் இருந்து ஹவுராவுக்கு ரயில் பயணம் மேற்கொண்ட ஒருவர் பெரும் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

ராஜேஷ் தல்வார் என்ற அந்த பயணி, ஜார்சுகுடா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ராஜேஷ் தல்வார் டீ வாங்குதவற்காக ரயிலில் இருந்து இறங்குகிறார்.

பின்னர் ரயில் மெதுவாக கிளம்பவே, அவர் ஒடும் ரயிலில், இரும்பு கைப்பிடிகளை பிடித்து ஏற முயற்சிக்கிறார். அப்போது, எதிர்பாராத விதமாக படியை விட்டு ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக்கொள்கிறார்.

இதனைக் கண்ட சகபயணிகள் அவரைக் காப்பாற்ற முயன்றபோது, அதிவேகமாக இழுத்துச் செல்லப்பட்டு ரயிலுக்குள் விழுந்தார் தல்வார்.

தொடர்ந்து, நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியுடன் அந்த சம்பவத்தை பார்க்கின்றனர். எனினும், தல்வார் இருப்பதே தெரியாமல் ரயில் செல்கிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................