This Article is From Nov 15, 2018

வாழ்வின் உன்னதத்தை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள்

உலகமெங்கும் குழந்தை தொழிலாளர்கள் முறை தடை செய்யப்பட்டுள்ள பொழுதிலும், இன்றளவும் 25 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெப் நிறுவனம் கூறுகிறது

வாழ்வின் உன்னதத்தை கற்றுக் கொடுக்கும் ஆசான்கள்

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சிகள் பலவும் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். காலம் மாறி வருகின்றது குழந்தைகளின் பழக்கமும் நடைமுறைகளும் மாறி வருகின்றன. இந்நிலையில் குழந்தை வளர்ப்பு முறைகளிலும் மாற்றங்கள் அவசியமாகிறது. இன்றைய கால குழந்தைகளுக்கு பொது சமூகமும் பெற்றோர்களும் செய்ய வேண்டியது என்னென்ன என்பதை
தெரிந்துகொள்வோமா
உலகமெங்கும் குழந்தை தொழிலாளர்கள் முறை தடை செய்யப்பட்டுள்ள பொழுதிலும், இன்றளவும் 25 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக யுனிசெப் நிறுவனம் கூறுகிறது. குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவும், அடிப்படைக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து பல நாடுகள் இதை வழங்குவ‌தை அரசு நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டுமென‌ பல வகையிலும் எடுத்துக் கூறி வருகிறது.

இன்றைய நுகர்வு கலாச்சாரத்துக்கு மத்தியில் குழந்தைகள் என்ன கேட்டாலும் மறுக்காமல் வாங்கிக் கொடுக்கும் பழக்கம் பெற்றோர்கள் மத்தியில் பெருகியுள்ளது. பெற்றோர்கள் பலரும் 'எனக்கு கிடைக்காதது என் பிள்ளைக்காது கிடைக்கனும்' என்று எண்ணி கேட்டதையெல்லாம் வாங்கி கொடுப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். மறுப்பை அறியாத குழந்தைகள் வாழ்வில் முதன் முறையாக மறுப்பை சந்திக்கும் பொழுது மிகவும் மனமுடைந்து சாதாரண விஷயங்களுக்கு விபரீதமான முடிவை எடுப்பதை பார்க்க முடிகிறது. இதற்கு ஒரே தீர்வு பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. குழந்தைகள் தேவைக்கு அதிகமான பொருட்களை கேட்கும் போது அதற்கு மறுப்பை பதிலாக கொடுக்க பெற்றோர்கள் தயங்க கூடாது. வாழ்வில் வரும் தோல்விகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் எதிர்கொள்ளும் வழி முறைகளையும் கற்றுக்கொடுப்பது இன்றைய சூழலில் முக்கியமாகிறது.

தற்போது அதிகரித்து வரும் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளுக்கு அரசு தண்டனையை அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு தொடுதல் குறித்தான விழிப்புணர்வையும் கொடுக்க வேண்டிய அவசியமும் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கு முறையான பாலியல் கல்விமுறையும் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென குழந்தை ஆர்வலர்கள் பலரும் கூறுகின்றனர். ஆண் பெண் பேதமின்றி வளர்ப்பதும், இன்றைய காலத்தில் ஆண் பெண் இருவருக்கும் சமவாய்ப்புகள் வழங்குவதும் முக்கியமாகிறது.


இந்திய குடும்பச் சூழலில் ஆண் பெண் உறவில் கூடுதல் அன்பையும் புரிதலையும் கொடுக்கக்கூடிய சூழல் குழந்தையின் வருகைக்கு பின்புதான் நிகழ்கிறது. இந்திய கலாச்சாரத்தில் ஒரு ஆணுக்கு பெண்ணின் உடல் குறித்த புரிதல் குழந்தை பிறப்பையொட்டி மட்டுமே ஏற்படுகிறது. குழந்தைகள் நாளைய சமூகத்திற்கு உருவாக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல பெற்றோர்களுக்கு கூடுதல் அன்பையும் பொறுமையையும் கற்றுக் கொடுக்கும் ஆசான்கள்.

.