கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், உள்ளூர் பொதுமக்களும் சேர்ந்து சிறுமியைக் காக்க முயற்சி மேற்கொண்டனர். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு!!

சிறுமியின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Mumbai: 

மும்பையின் புறநகர் பகுதியான கரில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 

இங்குள்ள 5 மாடிக் கட்டிடம் ஒன்று இன்று மதியம் 2.20-க்கு இடிந்து விழுந்தது. இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மகி மோத்வானி என்ற 10 வயது சிறுமி சிக்கிக் கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அவரை மீட்க தீவிரமாக போராடினர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார், உள்ளூர் பொதுமக்களும் சேர்ந்து சிறுமியைக் காக்க முயற்சி மேற்கொண்டனர். 

இருப்பினும், உயிரிழந்த நிலையில்தான் சிறுமி மகி மோத்வானியின் உடல் மீட்கப்பட்டது. இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வேறு யாரேனும் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளார்களா என்று மீட்பு படையினர் தேடி வருகின்றனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................