சிவசேனாவுடன் கூட்டணி வைக்க NCP போடும் ‘முதல்வர்’ கண்டிஷன்..!? - பரபர தகவல்

Maharashtra Government Formation: சிவசேனாவை ஒப்பிடும்போது, வெறும் 2 இடங்களைத்தான் தேசியவாத காங்கிரஸ் குறைவாக பெற்றுள்ளது.

சிவசேனாவுடன் கூட்டணி வைக்க NCP போடும் ‘முதல்வர்’ கண்டிஷன்..!? - பரபர தகவல்

சிவசேனா (Shiv Sena), தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது

ஹைலைட்ஸ்

  • President's Rule-னால் பேச்சுவார்த்தை நடத்த அதிக நேரம்: சரத் பவார்
  • NCP முதல்வர் பதவியில் பங்கு கேட்பதாக தகவல்
  • Shiv Sena - பாஜக கூட்டணி முறிவுக்கும் இதே கோரிக்கைதான் காரணம்
Mumbai:

மகாராஷ்டிராவில் (Maharashtra) நேற்று குடியரசுத் தலைவர் ஆட்சி (President's Rule) அமலுக்கு வந்தது. இருப்பினும் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரண்டாவது பெரும் கட்சியாக வந்த சிவசேனா (Shiv Sena), தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தேசியவாத காங்கிரஸ் தரப்பு, முதல்வர் பதவியிலும் பங்கு கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. தேர்தலுக்கு முன்னர் இந்த இரு கட்சிகளும் கூட்டணியிலிருந்து, தற்போது அதிகாரப் பகிர்வு மோதல் காரணமாக பிரிந்துவிட்டன. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

சிவசேனாவை ஒப்பிடும்போது, வெறும் 2 இடங்களைத்தான் தேசியவாத காங்கிரஸ் குறைவாக பெற்றுள்ளது என்பதைக் கணக்கில் கொண்டுதான், முதல்வர் பதவி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவியில் பங்கு கேட்டுதான், பாஜக-வுடன் மோதலில் ஈடுபட்டு, கூட்டணியையும் முறித்தது சிவசேனா. தற்போது அந்தக் கட்சிக்கும் அதே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய உத்தவ் தாக்கரே, “காங்கிரஸும் நாங்களும் வித்தியாசமான கொள்களைகளைக் கொண்டவர்கள். ஆனால், எங்களால் சேர்ந்து வேலை செய்ய முடியும். பாஜக-வைப் போல. பாஜக, காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் கூட்டணி வைத்தது. அதைப் போல தற்போதைய சூழலிலும் கூட்டணி வைக்க முடியும்,” என்றார்.

தொடர்ந்து பாஜக-வை விமர்சித்த தாக்கரே, “நிதிஷ் குமார், பஸ்வான், பிடிபி, நாயுடு உள்ளிட்டோர் எப்படி பாஜக-வுடன் கூட்டணி வைத்தனர். அனைவரும் வெவ்வேறு கொள்களைக் கொண்டவர்கள்தானே. எனவே, நாங்களும் ஆலோசனை செய்து கூட்டணி குறித்து முடிவெடுப்போம். 

முதலில் எந்த வகையில் கூட்டணி வைக்கலாம் என்பது குறித்த Common Minimum Programme (CMP) பற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும். அதைச் செய்வோம்,” என்று உறுதி அளித்துள்ளார். 

More News