அரசியல் இல்லா வழக்குகளில் மட்டும் சிபிஐ சிறப்பாக செயல்படுவது ஏன்?

அரசியல் இல்லாத வழக்குகளில் சிபிஐ நல்ல வேலையைச் செய்வது ஏன்? எந்தவொரு பொது நிறுவனத்தின் வெற்றியைக் காட்டிலும் தோல்விதான் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது என்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அரசியல் இல்லா வழக்குகளில் மட்டும் சிபிஐ சிறப்பாக செயல்படுவது ஏன்?

சிபிஐயின் நிர்வாகம் நிதி சுயாட்சியை ஆதரித்தும் பேசினார்.


New Delhi: 

இந்தியாவின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நேற்று நாட்டின் முதன்மை விசாரணை நிறுவனம் - மத்திய புலனாய்வு பிரிவின் நிர்வாகத்தை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் “சட்ட ரீதியான அந்தஸ்தைப் பெற வேண்டும்” என்றார். சட்ட ரீதியான் அநிலை, தேசிய தணிக்கையாளர், கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரலுக்கு சமமாக இருக்க வேண்டும் என்றார். மேலும் சிபிஐயின் நிர்வாகம் நிதி சுயாட்சியை ஆதரித்தும் பேசினார்.

சிபிஐ ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய்,  சிபிஐ தனக்கான சிறப்பான இடத்தை உருவாக்கிக் கொண்ட சில புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக இருப்பதை பாராட்டினார். “அரசியல் இல்லாத வழக்குகளில் சிபிஐ நல்ல வேலையைச் செய்வது ஏன்? எந்தவொரு பொது நிறுவனத்தின் வெற்றியைக் காட்டிலும் தோல்விதான் மக்கள் கவனத்தை ஈர்க்கிறது என்றார்.

“பலர் உயர்மட்ட மற்றும் அரசியல் ரீதியான முக்கியமான வழக்குகளில் நீதித்துறை ஆய்வின் தரத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை. இத்தகைய சிக்கல்கள் முறையான சிக்கல்களை பிரதிபலிக்கின்றன. டெல்லி சிறப்பு போலீஸ் ஸ்தாபனச் சட்டம் 1946இன் பிரிவு 4ன் படி ஏஜென்சியின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடும் அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க நிறுவனத்திற்குள் போதுமான பலம் உள்ளது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று அவர் கூறினார். 

சிபிஐயின் முக்கியமான அம்சங்களை அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து விலக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரலுக்கு வழங்கப்பட்ட சட்டத்திற்கு இணையாக சிபிஐக்கு சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் சிபிஐயின் சட்ட ஆணையை வலுப்படுத்த வேண்டும் என்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................