ரயில் மூலம் வேலூரில் இருந்து சென்னைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர முடிவு!!

சென்னைக்கு நாள் ஒன்றுக்கு தண்ணீர் தேவை 800 மில்லியன் லிட்டராக உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ரயில் மூலம் வேலூரில் இருந்து சென்னைக்கு 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டுவர முடிவு!!

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு வேலூல் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்படி தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் ரயில் மூலமாக சென்னைக்கு கொண்டு வரப்படும். 

முன்னதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னைக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருவதாக தெரிவித்திருந்தார். பின்னர் இதுபற்றி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர், தங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பதாக தமிழகம் தெரிவித்து விட்டது என்று கூறினார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையின் நீர் தேவை நாள் ஒன்றுக்கு 800 மில்லியன் லிட்டர் என்றும், கேரளா தரும் 2 மில்லியன் லிட்டர் போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.

உதவிக் கரம் நீட்டியதற்காக கேரள அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2 மில்லியன் தண்ணீரை தினந்தோறும் கேரளா தந்தால் உதவியாக இருக்கும் என்றும், முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

இதற்கிடையே சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்கு வேலூரில் இருந்து தினந்தோறும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் கொண்டு வருவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................